உதட்டுல படாம ஒரு முத்தம்! : அதிலென்ன இருக்கு குத்தம்?

Get real time updates directly on you device, subscribe now.

vishal

‘பசங்க’ படம் ஒரு டாகுமெண்டரி டைப்ல தான் இருக்கும். அப்படிப்பட்ட கதையை கமர்ஷியலா கொடுத்ததால் அந்தப்படம் பெரிய அளவுல ஹிட்டாச்சு.

தொடர்ந்து அதே மாதிரி படங்கள் பண்ணிக்கிட்டு இருந்தா நம்மளை ஏதோ சாப்ட்டான கேரக்டர்னு எல்லாரும் நெனைச்சிடுறாங்க. அந்த கலர் டோனை மாத்தணும்னு ஆசையிருந்துச்சு.

அதுக்கான பதில் தான் இந்த ‘கதகளி’. இது பக்காவான ஆக்‌ஷன் படம் என்றபடியே பேச ஆரம்பித்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை முடித்துக் கொடுக்கும் ஒருசில இயக்குநர்களில் இவரும் ஒருவர். அதனால் தான் ‘பசங்க 2’ ரிலீசான கையோடு பொங்கல் ரேஸில் குதித்திருக்கிறது ‘கதகளி’.

விஷால், கேத்ரீனா தெரசா நடிக்க தனது பசங்க புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரியுடன் சேர்ந்து தயாரித்து இயக்கியிருக்கிறார்.

படத்தோட கதை என்னோட ப்ரெண்ட் வாழ்க்கையில நடந்த சம்பவத்தை அடிப்படையை வெச்சு எழுதினேன். அவன் அவனோட சோகத்தை என்கிட்ட சொன்னப்போ அதை ஏன் படமாக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதுதான் ‘கதகளி’ படமாயிடுச்சு என்றார்.

அடுத்து விஷால் பேசினார்…

Related Posts
1 of 73

‘கதகளி’ன்னாலே ஏதோ டான்ஸ் சம்பந்தப்பட்ட படமா இருக்குமோன்னு எல்லோரும் நெனைச்சுக்கிறாங்க. அதெல்லாம் இல்லை. இது ஒரு ஆக்‌ஷன் படம், படம் முழுக்க அந்த மூடு இருந்துக்கிட்டே இருக்கும். ஒருத்தன் கோபத்தோட ஒரு செயலை செய்யும் போது மச்சான் அவன் ‘கதகளி’ ஆடிட்டாண்டான்னு சொல்லிக் கொள்வோம் இல்லையா? அப்படித்தான் இந்த படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலை பிக்ஸ் பண்ணினோம்.

இந்தக் கதையை பாண்டிராஜ் சார் சொல்றப்போ எனக்கு ஒரு நாவலை படிக்கிற மாதிரி உணர்வு இருந்துச்சு. அந்தளவுக்கு கதையில வேகம், ஒரு கொலை நடக்கும், இடைவேளைக்குப் பிறகு அதை யாரு செஞ்சிருப்பாங்கன்னு ஒரு நூலைப் பிடிச்சிட்டுப் போனா அடுத்தடுத்த ட்விஸ்ட் இருக்கும்.

படத்துல பாடல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பின்னணி இசையில ஹிப் ஹாப் தமிழா சூப்பரா செஞ்சு கொடுத்திருக்கிறார் என்றார் விஷால்.

பேசி முடியவும் ஒரு கேள்வி வந்தது :

இந்தப் படத்துல விஷால் – கேத்ரீனாவுக்கும் ஒரு லிப் கிஸ் சீன் இருக்கு அது ஆபாசமா இருக்குன்னு சென்சார்ல கட் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்களே உண்மையா? என்றார் ஒரு நிருபர்.

அதெல்லாம் இல்லை சார், பொதுவா என் படங்கள்ல ஹீரோயினோட ஹீரோ நெருக்கமா இருக்கிற சீன்களே இருக்காது. என்னோட முந்தைய படங்களோட ஹீரோக்கள் விமலும், சிவகார்த்திகேயனும் கூட என்ன சார் நெருங்கி கூட நிக்க விட மாட்டேங்கிறீங்கன்னு வருத்தப்பட்டு கேட்பாங்க…( சிரிக்கிறார்…) ஆனா இதுல கதைக்கு ஒரு லிப் கிஸ் சீன் தேவைப்பட்டதால வெச்சிருக்கோம். அதுவும் கூட விரலை நடுவுல வெச்சிக்கிட்டுத்தான் கொடுக்கணும்னு சொன்னேன். அப்படித்தான் விஷாலும் கிஸ் கொடுத்திருக்கிறார். மத்தபடி சென்சார்ல கட்டாகிற அளவுக்கெல்லாம் அந்த சீன்ல ஆபாசமில்லை என்றார்.

அதானே..? உதட்ட தொடாம ஒரு முத்தம், அதுலென்ன இருக்கு குத்தம்?