‘PV999’ படம் ஸ்ரீரெட்டியின் கதையா?

சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒருபோகப் பொருளாகவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது .
அவர்களை சக மனுஷியாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும், நடத்த வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘PV999 ‘ என்ற பெயரில் இயக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் வரதராஜ்.
‘பெண் விலை வெறும் ரூபாய் 999’. இதைத்தான் சுருக்கமாக ‘PV999 ‘ என்று டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படம் துளியும் ஆபாசக் கலப்பின்றி கன்னியமாக தயாராகி வருகிறது.
படத்துக்கு சதீஷ்குமார் – மோகன் ஒளிப்பதிவு செய்ய , ஜூடோ சாண்டி இசையமைக்கிறார்.
இதில் நடித்த நடிகர் நடிகைகளை முண்ணணி நடிகர், நடிகையர் அறிமுகப்படுத்த உள்ளனர். அக்டோபரில் பாடல்கள் வெளியாகவுள்ளன. நவம்பரில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சில தினங்களுக்கு முன் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பெண்ணியம் பேசும் வரலட்சுமி தரப்பிலிருந்து வெளிவந்ததால் இது பெண் பாதுகாப்பு சம்பந்தமான படம் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இதற்கிடையில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் நடிகை ஶ்ரீரெட்டியின் கதை தான் இந்தப்படம் என்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே ஶ்ரீரெட்டியின் கதை அவர் நடித்து தயாராகி வருகிற நிலையில், இப்படமும் அதே கதையாக இருக்குமோ என்கிற பரபரப்பும் நிலவுகிறது. உண்மையிலேயே இது ஸ்ரீரெட்டியின் கதைதானா? என்று கேட்டால் படம் வரட்டும் பாருங்கள்” என்று கண் சிமிட்டுகிறார் இயக்குநர்.
படத்தை ரெயின்போ புரொடக்ஷன்ஸ் சார்பில் சங்கர் மற்றும் டீம் தயாரித்துள்ளனர்.