ஹிந்திக்கு போகும் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியின் ‘பியார் பிரேமா காதல்’!

Get real time updates directly on you device, subscribe now.

ரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தத்தை தரும் படமாக தயாராகி வருகிறது ‘பியார் பிரேமா காதல்’.

இளைஞர்களை சுண்டி இழுக்கும் இந்த டைட்டிலில் தயாராகி வரும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க, இளம் இயக்குனர் இலன் இயக்கி வருகிறார்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆரம்பிக்கப்பிட்ட நாளிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் இடம்பெறும் ” High on Love” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பெரும் ஹிட் ஆனதால் இப்படத்தின் ஹிந்தி உரிமையை வாங்க சில பாலிவுட் பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதால், ஹிந்தி ரீமேக் பற்றி தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை” என்கிறார் இயக்குனர் இலன்.