‘லோக்கலான’ பட டைட்டிலை நிராகரித்த சிவகார்த்திகேயன்
‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் சிவகார்த்திகேயனை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் பற்றிய ரகசியம் கசிந்திருக்கிறது.
ஆமாம், இப்படத்துக்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ராஜேஷ். ஆனால்
ஆனால் இந்த டைட்டில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லையாம். மன்னன் படத்தின் கதை என்பதால் அதைப்போலவே இந்தப்படத்தின் டைட்டிலும் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.
புது டைட்டில் ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கிறது இயக்குனர் வட்டாரம்.