குறுக்கா மறுக்கா ஓடும் லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸு சமீபகாலமாக குறுக்கா மறுக்கா ஓடிக்கொண்டிருக்கிறார். எதில் என்றால் அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் தான். அதற்கான முதல் காரணம் அவர் சீமான் மீது வைக்கும் விமர்சனம். சீமானின் தம்பிகள் சிலர் லாரன்ஸை வசைமாறி பொழிந்ததை எதோ ஒரு சூழ்ச்சி எனப்புரிந்து கொண்டு லாரன்ஸ் சமீபகாலமாக சீமானுக்கு எதிராக கம்பு சுத்துகிறேன் என்ற பெயரில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் கருத்து மழைகளையும் சீமான் மீதான விமர்சனங்களையும் பொழிந்து வருகிறார்.
லாரன்ஸ் நிறைய சேவைகள் செய்பவர் அதில் மாற்றமில்லை. அதற்காக அவர் க்டைக்கும் கேப்பில் எல்லாம் தனது தனிப்பட்ட விசயங்களுக்கு பொதுமேடையை பயன்படுத்துவது நியாயமில்லை. சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் இப்படித்தான் ரஜினியை புகழ்கிறேன் என்ற பெயரில் கமலையும் சீமானையும் வம்புக்கிழுத்து வசமாக வாங்கிக்கொண்டார். இவர் இப்படி பேசுவதை ரஜினியே விரும்பவில்லை என்பது தான் ஹாட் மேட்டர். அதனால் தற்போது நான் பேசுவதற்கும் சூப்பர் ஸ்டாருக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்..கொடுமை