விரும்பினார் அஜித், விட்டுக் கொடுத்தார் ராகவா லாரன்ஸ்! : வேதாளம் தோள் மாறிய கதை

Get real time updates directly on you device, subscribe now.

vethalam

தோ வருகிறது இதோ வருகிறது என்று ஒருவழியாக நேற்று நள்ளிரவு முருங்கை மரம் ஏறி விட்டது அஜித்தின் 56 வது படமான ‘வேதாளம்’.

ரசிகர்களும் விடிய விடிய ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து கொண்டாடி தீர்த்து விட்டார்கள்.

படத்தில் தாதாவாக வரும் அஜித்தின் கேரக்டருக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருந்ததால் இதையே டைட்டிலாக்கி விடலாம் என்று இயக்குநர் சிவா முடிவு செய்து விட்டாலும் டைட்டில் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை என்பதே உண்மை.

Related Posts
1 of 12

வேதாளம் டைட்டில் ஏற்கனவே இன்னொரு நடிகர் தன் படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். அஜித் படத்துக்காக கேட்டதும் மறு பேச்சில்லாமல் கொடுத்து விட்டார்

அவர் வேறு யாருமல்ல நடிகர் ராகவா லாரன்ஸ் தான்!

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் லாரன்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”அஜித்திற்கு இந்த டைட்டில் மிகவும் பிடித்திருப்பதாக கூற அதுக்கென்ன தாராளமா எடுத்துங்க” என்று விட்டுக் கொடுத்திருக்கிறார். இப்படித்தான் ‘வேதாளம்’ தோள் விட்டு தோள் மாறியிருக்கிறது.

இனிமேல் அஜித் ரசிகர்களுக்கும் பிடித்தவராகி விடுவார் லாரன்ஸ்!