பாலிவுட்டில் முதல் சான்ஸ் : தளும்ப தளும்ப கவர்ச்சியோடு இறங்கிய ராய் லட்சுமி!

Get real time updates directly on you device, subscribe now.

raai-lakshmi

ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் ராய் லட்சுமி.

தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தவருக்கு திடீரென்று பாலிவுட்டில் ஜூலி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்கிற சூழ்நிலை இருந்தாலும் முதல் அறிமுகப்படம் அதோடு தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதால் மறுக்காமல் அந்தப் படத்தில் அதிகளவு ஆடைக்குறைப்பு செய்து தளும்ப தளும்ப கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம் ராய் லட்சுமி.

‘ஜூலி’ முதல் பாகத்தை இயக்கிய தீபக் ஷிவ்தாசனியே தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

Related Posts
1 of 142

நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

அதோடு இதுவரை அந்த டீஸரை 1 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்களுக்கு பார்த்து மயங்கியிருக்கிறார்கள். டீஸருக்கு கிடைத்த வரவேற்பு படத்துக்கும் கிடைத்தால் தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது என்கிற முடிவுக்கு வந்து விடுவாராம் ராய் லட்சுமி.

பரபரப்பான இப்படம் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி ரிலீசாகிறது.