‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷுக்கு பதிலடி கொடுத்த ராஜமெளலி!

Get real time updates directly on you device, subscribe now.

raja

ம்பாதிக்கும் வரை தமிழ்நாடு தான் என்னோட தாய் வீடு. அங்க தான் நான் தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தேன். தமிழ்ரசிகர்கள் தான் என்னோட இரண்டு கண்கள் என்றெல்லாம் உருக்கமாக பேசும் மற்றமாநில ஹீரோக்கள் கொஞ்சம் கையில் சில்லறையைப் பார்க்க ஆரம்பித்ததும் வந்த வழியை மறந்து வாய்த்துடுக்கோடு பேச ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படித்தான் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் தயாரான பிரம்மாண்டப்படமான ‘பாகுபலி’ படத்திற்கு நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு உரிய திறமை மிக்கவர்கள் என கருதவில்லை” என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார் நடிகர் சுரேஷ். அதோடு அந்தப்படத்தில் சத்யராஜ் நாசர் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் தமிழ் நடிகர்களுக்கு எதிராக சுரேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று அவரது கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருக்கிறார் பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

Related Posts
1 of 6

“நான் எப்போதுமே எனது படத்தில் நடிக்கும் நடிகர்களின் மொழியைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மற்ற மொழி நடிகர்கள் என் படத்தில் நடிப்பது இது முதல் முறையல்ல. போஜ்புரி நடிகர்கள், ஹிந்தி நடிகர்கள், தமிழ் நடிகர்கள் என பலருடன் பணியாற்றி இருக்கிறேன். யாருக்குமே தெரியாத தெலுங்கு நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன்.

எனது படம் மூலமாக பல நல்ல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதற்கு நான்தான் காரணம் என்று எப்போதும் சொன்னதில்லை. எப்போதுமே நடிகர்களின் வரிசையில் என்னுடைய பாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமானவராக இருப்பார் என்று மட்டும் தான் பார்ப்பேன். எனக்கு நடிகர்களின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்றெல்லாம் பிரிக்க தெரியாது.

ஒரு இயக்குநராக என்னுடைய பாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று பார்ப்பது எனது பணி. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக எல்லாம் நான் கவலைப்பட முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இப்போ உங்க முகத்தை எங்க போய் வெச்சுப்பீங்க மிஸ்டர் சுரேஷ்காரு….!