‘பாகுபலி’ நாயகன் பிரபாஸுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

Get real time updates directly on you device, subscribe now.

prabhas

”சாஹு” படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் ”பாகுபலி” புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் இப்போது தேசிய நாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை. சமீபத்தில் GQ இதழ் வெளியிட்டுள்ள “அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள்” இன் தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்த இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற பிரபலங்கள் பிவி சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா.

இந்த சந்தோஷத்தோடு பாகுபலி 1 2-ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு நன்றிக்கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

Related Posts
1 of 12

இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.

பிரபாஸ்.