லிங்குசாமிக்கு ரஜினி செய்த மிகப்பெரிய உதவி!
ஒரு படத்துக்கு டைட்டில் வைப்பது தான் பெரிய விஷயம். அதைவிட அது ஒரு பிரபலத்தின் பெயர் என்றால் அவரிடம் அனுமதி வாங்குவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கும். ஆனால் ரஜினி முருகன் டைட்டிலை போனில் தான் கேட்டேன். உடனே ரஜினி சார் ஓ.கே சொல்லி விட்டார் என்று சிலிர்த்தார் தயாரிப்பாளர் லிங்குசாமி.
இதுகுறித்து ‘ரஜினி முருகன்’ ஆடியோ பங்ஷனில் அவர் பேசியதாவது :
‘ரஜினி முருகன்’ டைட்டிலைப் பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த் என்று ரஜினி சார் பெயரில் டைட்டில் வைக்க அவர் அனுமதிக்கவில்லை. சிவாஜி என்கிற டைட்டிலுக்கு ஷங்கர் சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார்.
‘ரஜினி முருகன்’ டைட்டில் சம்பந்தமாக ரஜினி சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த டைட்டில் பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் வரும் ஒரு பாத்திரம். எதிர்மறையாக எதுவும் பயன்படுத்தவில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன்.
உடனே அவர் ”போதும், போதும்” என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார். இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஏதோ இருக்கு. சௌந்தர்யா கிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக்கங்க… என்றும் சொன்னார்.
எனக்காக இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்த ரஜினி சாருக்கு பெரிய நன்றி என்றார் லிங்குசாமி.