ரஜினி செஞ்ச உதவி : ச்ச்சே… யாருக்கும் தெரியாமல் போய் விட்டதே..??

Get real time updates directly on you device, subscribe now.

rajini1

லது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்கிற ரீதியில் தான் பிரபலங்களின் உதவிகள் இருக்கிறது.

சிலர் அதை தெரியக்கூடாதென்று கட்டளையிட்டு செய்வார்கள். இன்னும் சிலரோ பிரஸ்மீட் வைத்து பப்ளிசிட்டியெல்லாம் செய்து செய்வார்கள்.

இதில் ரஜினி முதல் ரகம். செய்வது கொஞ்சமாக இருந்தாலும் அதுவும் கூட வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்பது தான் அவரது எண்ணமாம்.

அதற்காக நாடு விட்டு நாடு சென்ற போது செய்த உதவியைக் கூட வெளிவராமல் பார்த்துக் கொண்டார் ரஜினி என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

Related Posts
1 of 74

ஏற்கனவே தன்னை வாழ வைத்த மக்களுக்கு பெரிதாக எந்த உதவிகளும் செய்ததில்லை என்கிற குற்றச்சாட்டு ரஜினி மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிற நிலையில் நேபாளச் சிறுவன் ஒருவனுக்கு முன் வந்து உதவிய சம்பவம் சைலண்ட்டாக அரங்கேறியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பே நேபாள நாட்டிலுள்ள ஹிமாலயாஸ் மலைப்பிரதேசங்களுக்கு பயணம் சென்று வந்தார் ரஜினி.

அப்போ அங்கு சிறுவன் ஓருவன் ரஜினியை தற்செயலாக சந்தித்தாராம், நன்றாக படிக்கும் அந்த மாணவன் மேல் படிப்பு படிக்க பணமில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். அதை அறிந்து கொண்ட ரஜினி, அந்த பையனின் முழுப்படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டு இன்று வரை உதவி செய்து வருகிறாராம்.

இப்படி ஒரு செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகிறார்கள் திருவாளர் ரசிகர்கள் கூட்டம்.

உலவும் செய்தி எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கட்டும் என்பதே நலம்!