ரஜினிகாந்த் அற்புதமான மனிதர் : சிலாகிக்கும் ராதிகா ஆப்தே!

Get real time updates directly on you device, subscribe now.

 

rathika

‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

அதற்குள் ரஜினியின் ‘கபாலி’ பட  நாயகியாகி விட்டதால் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகி விட்டார்.

Related Posts
1 of 65

அவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் ‘கபாலி நாயகி’, ‘கபாலி நாயகி’ என்று கொண்டாடுகிறார்கள். ட்விட்டரில் வந்தாலும் ‘கபாலி’ பற்றி கேட்காமல் விடுவதே இல்லை.

ஹிந்தியில் அவர் நடித்திருக்கும் ஃபோபியா படத்தின் டிரெய்லர் பங்ஷனில் கலந்து கொண்டவரிடம் ‘கபாலி’ படம் குறித்தும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் மீடியாக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அப்போது பேசிய ராதிகா ஆப்தே, ”ரஜினி சாருடன் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் சேர்ந்து நடித்தது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்தது என் வாழ்வின் மிகவும் சிறந்த அனுபவமாகும். ரஜினி சாரை போல் யாருமே இல்லை, அவர் மிகவும் அற்புதமான மனிதர்” என்று சிலாகித்திருக்கிறார்.