சிங்கப்பூரில் ‘ரஜினிமுருகன்’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!
‘காக்கி சட்டை’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ரஜினி முருகன்.’
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்த பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையடைய உள்ள நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் சிங்கப்பூரில் வெளியாக உள்ளது. இம்மாதம் 29 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள சன்டெக் சிட்டி என்ற பிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டி.இமான் இசையமைத்த என்னமா இப்படி பண்றீங்களேமா என்ற பாடல் வெளியாக உள்ளது.
மேற்கண்ட பாடலை அந்த விழாவில் சிவகார்த்திகேயனும், டி.இமானும் இணைந்து பாடுகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பொன்ராம், தயாரிப்பாளர் என்.லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் #Singaporelasingle #yennammaIppadiPanreengalaema என்கிற டைட்டில்களோடு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.