ஜெயமோகன் கதை! மணிரத்னத்தை டாமிநேட் செய்த இயக்குநர்!

Get real time updates directly on you device, subscribe now.

இஸ்மாயில் ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு “ரத்த சாட்சி”. எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.‘ஆஹா தமிழ் ‘ ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது.,

” ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர்களைத் தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒத்துப் போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பணி இந்தக் கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளரின் பங்கு கதையின் போக்குடன் இயைந்து போயுள்ளது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்

இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

#Rathasaatchi #ரத்தசாட்சி