‘செண்டிமெண்ட்’டுக்காக தேவாவை கானா பாட வைத்த இயக்குனர்
ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி. ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ்பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.
கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் எம்.எஸ். பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘கலக்கப்போவது யாரு’ விக்னேஷ் கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிச்சந்திரன்.
படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்…
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை தொடர்ந்து இது நான் இயக்கும் ஐந்தாவது படம். மஜ்னு படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தினேன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்திலும் தேவா இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அதேபோல் தீபக் நிலம்பூர் இசையில் ”நட்பதிகாரம் 79” படத்தின் ஐந்து பாடல்களும் மிக சிறப்பாக வந்துள்ளது. இதில் கூடுதல் அம்சமாக தேவா ஒரு சிறந்த கானா பாடலை பாடியிருக்கிறார். இந்த வருடத்தில் முக்கிய ஹிட் பாடலாக இது இருக்கும்.
“கண்ணெதிரே தோன்றினாள்” நட்பையும் காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றி அடைந்தது. அதேபோல் “நட்பதிகாரம்-79” படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றியும் வேறு ஒரு பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன் என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன்.