சாந்தனுவின் ”இராவண கோட்டத்தில்” ஆனந்தி

Get real time updates directly on you device, subscribe now.

‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ‘ஆனந்தி’ தற்போது சாந்தனு பாக்யராஜின் ‘ராவண கோட்டம்’ படத்தில்  நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. “ராவண கோட்டம்” அந்த மாதிரியான ஒரு திரைப்படம்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். ‘மதயானை கூட்டம்’ படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

Related Posts
1 of 137

சாந்தனுவின் புதிய தோற்றம் அனைவரையும் அசர வைக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன் முறையாக பார்த்த போது என்ன உணர்ந்தேனோ அதை நீங்களும் உணர்வீர்கள். உண்மையில், ‘ஃபைட் சாங்’ என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில் தான் முதலில் நடித்தேன்” என்றார்.

பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பிஎல் தேனப்பன், முருகன் (லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தற்போது, முதல்கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் முழுவீச்சில் நடந்து வருகிறது.