பாடவா..? நடிக்கவா..? : உஷாரான ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசனுக்கு இருக்கும் அழகுக்கும், நடிப்புத் திறமைக்கும் அவர் தமிழில் இன்னொரு ரவுண்டு வருவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த ‘பீட்ஸா’ ஹிட்டானதைத் தொடர்ந்து தனது செகண்ட் இன்னிங்க்ஸை ஆரம்பித்த ரம்யாவுக்கு தமிழில் அடுத்தடுத்த நல்ல படங்கள் அமைந்தும் மலையாளப் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தமிழில் யாராவது இசையமைப்பாளர்கள் பாடக்கூப்பிட்டால் உடனே ப்ளைட்டைப் பிடித்து வந்து பாடிக்கொடுத்து விட்டுப் போவார்.
அதன்பிறகு அவர் ஒரு நடிகை என்பதையும் மறந்து ஒரே ஒரு பாடலைப் பாட மட்டுமே எல்லா இயக்குநர்களும் போன் போட்டு கூப்பிட்டார்கள்.
ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்த ரம்யா கைவசம் இப்போது சொல்லிக்கொள்ளும் படி படங்கள் இல்லை.
ஆகையால் இனிமேல் எந்தத் தமிழ்ப் படங்களிலும் பாடப்போவதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் சொற்ப சம்பளம் கொடுத்தாலும் நடிக்கத் தயார் என்று வாய்ப்பு கேட்டுப் போனவருக்கு விஜய் சேதுபதி நடிக்கப் போகும் ‘சேதுபதி’ சான்ஸ் கிடைத்திருக்கிறது.
இனிமேல் நடிப்பில் மட்டுமே முழுக்கவனமும் இருக்குமாம ரம்யாவுக்கு….
இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா இப்படித்தான்!