ஸ்ருதிஹாசனா இது? : அசந்து போன அஜித் படக்குழு
அதிகபட்ச கவர்ச்சி காட்ட ஸ்ருதிஹாசன் எப்போதுமே மறுப்பு சொன்னதில்லை. அப்படிப்பட்ட அவரை குடும்பப் பெண் போல அலங்கரித்தால் அது ஆச்சரியம் தானே..?
அப்படி ஒரு அதிசயம் அஜித்தின் 56-வது படத்தில் நடந்துள்ளது.
ஹிந்தியில் கப்பார் இஸ் பேக், தெலுங்கில் ஸ்ரீமந்துடு என இரண்டு ஹாட்ரிக் வெற்றிப்படங்களைக் கொடுத்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முன்னணியில் உள்ளன.
அடுத்து ஹிந்தியில் வெல்கம் பேக், தமிழில் விஜய்யுடன் புலி ஆகிய படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர் புலி படத்தில் கவர்ச்சி பிளஸ் கேரக்டர் ரோலி நடிக்கிறார்.
ஆனால் அஜித் படத்திலோ பக்கா குடும்பப் பெண்ணாக வருகிறாராம் ஸ்ருதி. படத்தில் கவர்ச்சிக்கு இம்மியளவும் வேலையில்லை என்று இயக்குநர் சிறுத்தை சிவா சொல்லி விட்டதால் இதுவரை தான் ஏற்று நடித்திராத கதாபாத்திரம் என்று சிலிர்க்கிறார் ஸ்ருதி.