ராபர்- விமர்சனம்

திருட்டுச் சம்பவங்களின் விளைவுகளைச் சொல்லும் படம்
கதையின் நாயகன் சத்யா ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நபர். அவர் ஏற்கனவே ஒரு வேலையில் இருந்தாலும், ஹேப்பி வாழ்விற்காக எக்ஸ்ட்ரா பணத்தைச் சேர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் தொழில் திருட்டு. திருட்டிலும் கேடுகெட்ட திருட்டான ஜெயின் பறிப்பைச் செய்கிறார். அப்படி ஜெயின் பறிப்புச் சம்பவம் ஒன்றில் ஒரு கொலையைச் செய்துவிடுகிறார். அந்தக் கொலைப்பழி அவரை எந்தெந்த வழிகளுக்குள் கொண்டு செல்கிறது என்பதே படத்தின் கதை
நாயகன் சத்யா நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு பெரும் ப்ளஸாக அமைந்துள்ளது. டேனிபோப் கொடுத்த வேலைக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், தீபாசங்கர், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்
ஜோகன் சிவனேஷ் தனது இசையால் திரைக்கதைக்கும் காட்சிகளுக்கும் வெயிட்டேஜ் ஏற்ற முயற்சித்துள்ளார். ஒளிப்பதிவில் சின்னபடம் என்ற சாயல் ஆங்காங்கே தெரிகிறது. மேக்கிங்கில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்
படத்தின் மையக்கதையை விட்டு விலகாத திரைக்கதை படத்திற்கு பெரும் பலம். ஆனால் காட்சிகளை சிறப்பான முறையில் இயக்குநர் எஸ்.எம் பாண்டி கையாளவில்லை. ஜெயின் பறிப்புச் சம்பவங்களின் டீடைல்ஸ் அனைத்துமே தரமாக இருந்தது. படத்தின் நீளத்தைச் குறைத்தது போல, காட்சியாக்கத்தில் ஆழத்தைச் சேர்த்திருந்தால் ராபர் ரசிகனுக்கு ஆபராக அமைந்திருக்கும்
2.5/5