‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் அறிமுகம்!

Get real time updates directly on you device, subscribe now.

சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது.

YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும்.

Related Posts
1 of 8

தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது. தனது கனவிற்காக போராட அவளைத் தள்ளுகிறது. குமுதாவின் பயணத்தைத் திரையில் கொண்டு வந்திருப்பது எனக்கு எமோஷனலான விஷயம். ரசிகர்களுக்கும் அதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ’டெஸ்ட்’ என்பது காதல், மீண்டு வருவது மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

குமுதாவின் கனவுகள் நிஜமாகுமா அல்லது எட்டாத விஷயமாகவே இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4 பாருங்கள்!