“சாணிக் காயிதம்” இன்று பிரைம் வீடியோவில் வெளியானது!

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு கதை என்பது மாயஜாலம் போன்றது அது பல தடைகளை தாண்டி தன்னை தானே உருவாக்கி கொள்ளும். இருப்பினும், ஒரு கதையிலிருந்து ஒரு ஆச்சர்ய தருணத்தை உருவாக்குவதே, ஒரு திரைப்பட இயக்குநரின் முக்கியமான பங்காகும் அதுவே கலையாகும், அவர் கதையை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். தனது முதல் படமான ‘ராக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மீண்டும் ஒரு கனகச்சிதமான கதைக்களத்துடன் திரும்பியுள்ளார். “சாணிக் காயிதம்” திரைப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு திரைப்படம் உருவாகும் முன், அதை பற்றிய கருத்து தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சாணிக் காயிதம் பயணமும் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது, அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்த படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார், அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.