மணிரத்னம் படம்னா டபுள் ஓ.கே : ‘ச்ச்சீய்…’ பல்லவி ஆகிறார் சாய் பல்லவி

Get real time updates directly on you device, subscribe now.

sai-pallavi1

வ்வளவு சீக்கிரத்தில் கேரள நடிகைகள் கவர்ச்சி கோதாவில் குதிக்க மாட்டார்கள்.

அதையும் மீறி குதித்தால் அது அந்தப்படத்தின் இயக்குநருக்காக மட்டுமே இருக்கும். அதிலும் மணிரத்னம் மாதிரியான மூத்த இயக்குநர்களின் பட வாய்ப்பு என்றால் எந்த ரேஞ்சுக்கும் இறங்கத் தயாராகி விடுகிறார்கள்.

‘பிரேமம்’ புகழ் நாயகி சாய் பல்லவியும் அந்தப் படத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் நடித்தார். அவரையே தமிழ்ப் படங்களுக்கு கேட்டபோது எந்த காரணத்தைக் கொண்டும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற கண்டிஷனைத் தான் முதலில் சொல்வாராம்.

Related Posts
1 of 34

அப்படி கண்டிஷன் போட்டும் மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வர, சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட்டார் சாய் பல்லவி.

கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இதில் அவரைத்தான் கமிட் செய்திருக்கிறார்கள். படத்தில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருப்பதால் எங்கே சாய் பல்லவி அதை காரணம் காட்டி பட வாய்ப்பை மறுத்து விடுவாரோ என்று குழப்பமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்க, நான் மணிரத்னம் படத்திலிருந்து விலகவில்லை என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி.

அதோடு ”மணிரத்னம் மாதிரியான லெஜண்ட் இயக்குநர் படத்தில் நடிப்பது என்பது நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எந்த கேரக்டரை எப்படி வடிவமைக்க வேண்டுமென்கிற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட இயக்குநர் எப்படி நடிக்கச் சொன்னாலும் நடிப்பேனே தவிர படத்திலிருந்து மட்டும் விலக மாட்டேன் என்று அதிர வைத்திருக்கிறார்”.

எல்லாம் ‘மணிரத்னம்’ங்கிற ஒரே ஒரு பேர் படுத்துகிற பாடு….