நான் தேறிட்டேன்னு நீங்களே சொல்லுவீங்க… : வருகிறார் வக்கீல் உதயநிதி!

அடுத்த லெவலுக்கு தாவியிருக்கிறார் உதயநிதி!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் மீண்டும் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் ‘மனிதன்’. இப்படத்தை ஐ.அஹமத் இயக்கியிருக்கிறார். உதயநிதியுடன் மீண்டும் இதில் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஹன்ஷிகா.
முந்தைய படமான ‘கெத்து’ எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் அதற்கும் சேர்த்து மொத்தமாய் இந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் உதயநிதி.
”என்னோட முதல் படத்துல எனக்கு டான்ஸ் சுத்தமாவே ஆடத் தெரியாது. ரெண்டாவது படத்துல அதை சரி பண்ணினேன். அதே மாதிரி ரெண்டாவது படத்துல சண்டைக்காட்சி ரொம்ப வீக்கா இருந்துச்சு. என்னோட மூன்றாவது படத்தில் அதை சரி பண்ணிக்கிட்டேன்.
அதேமாதிரி தான் இந்தப் படத்துல எனக்கு புது எக்ஸ்பீரியன்ஸ் கெடைச்சிருக்கு. அதாவது படத்துல நீளமான வசனங்களை தடுமாறாமப் பேசியிருக்கேன். கண்டிப்பா நான் தேறிட்டேன்னு நீங்களே சொல்லுவீங்க…” என்கிறார் உதயநிதி.
காதல், நகைச்சுவை படங்களில் நடித்தவருக்கு இது உண்மையிலேயே வித்தியாசமான படமாக அமையுமாம். பொள்ளாச்சியிலிருந்து சென்னை வரும் சாதாண ஒரு வக்கீல், நியாயத்திற்காக பெரிய வக்கீல் பிரகாஷ்ராஜூடன் ஏற்படும் போராட்டம் தான் இந்த மனிதன். கோர்ட்டு நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் வழக்கறிஞராக வருகிறார் உதயநிதி.
என்ன தான் கோர்ட்டு கேசு, வக்கீல்ன்னு இருந்தாலும் படத்துல வக்கீல்களை புண்படுத்தும் சர்ச்சை காட்சிகள் எதுவுமே இல்லை என்பது தான் ஹைலைட்.