’கஞ்சா’ அடித்த பரத்! ‘நாய்’ வேஷம் போட்ட பிரேம்ஜி!! : தமிழுக்கு இது புதுசுங்க…!!!

Get real time updates directly on you device, subscribe now.

simba1

”நீங்க நாயா நடிக்கணும்னு சொன்னப்ப கொஞ்சமும் யோசிக்கல பிரேம்ஜி, அடுத்த நொடி ரெடின்னு வந்து நின்னார்” என்கிறார் ‘சிம்பா’ படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.

பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு ஆறரிவு உள்ள மனுஷனுக்கும், ஐந்தறிவு உள்ள ஒரு நாய்க்கும் உள்ள ரிலேஷன்ஷிப் தான் படத்தோட மெயின் தீம்.

தமிழ் சினிமாவுல இந்த டைப் படங்கள் வந்ததே இல்லை. அதனாலேயே இந்தப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். அதோட தமிழ் சினிமா உலக ரசிகர்களின் ரசனை எல்லையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். அது மட்டுமல்ல அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ‘சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ப்ளாக் காமெடிங்கிற ஜானர்ல அட்டகாசமாக சொல்லியிருக்கிறாராம்.

அதேபோல எப்போதுமே தனிமையில இருக்கிறதுலான வாழ்க்கை திசைமாறி எப்போதுமே பிரம்மையில இருக்கிற ஒருத்தனோட உலகம் எப்படி இருக்கும். என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக ஹீரோ பரத் கஞ்சா அடிக்கும் காட்சிகளிலும் துணிந்து நடித்திருக்கிறார்.

Related Posts
1 of 5

கஞ்சா அடிக்கிற காட்சிகள் எல்லாமே திணிக்கப்பட்ட காட்சிகள் இல்லை. அது படத்தோட கதைக்கு தேவைப்படுற அளவுக்கு மட்டுமே இருக்கும். அதே சமயம் ரசிகர்களை கஞ்சா அடிக்க தூண்டுற விதமாகவும் கண்டிப்பா இருக்காது. என்று உறுதியாகச் சொல்கிறார் பரத். மொத்தத்துல இந்த ‘சிம்பா’ ஒரு முழுமையான ஸ்டோனர் மூவியா இருக்கும்.

இதில் பிரேம்ஜி தான் நாயாக வருகிறார். அவரோட முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான கேரக்டர் இருந்ததால இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். நாயா நடிக்கும் போது சாக்கு மூட்டைகளை தச்சு குடுத்து அதை போடச் சொல்லிட்டாங்க. அது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மத்தபடி ஷூட்டிங் ரொம்ப நல்லாப் போச்சு என்று சொல்லும் பிரேம்ஜி ஒரு சீனில் த்ரிஷா வீட்டின் நாயாகவும் வந்து அவரை சைட் அடிக்கவும் செய்வாராம்.

கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த ‘வருடு’ பட நாயகி பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரமணாவும் நடித்திருக்கிறார்கள். தமிழுக்கு புது வரவாக ஸ்வாதி தீக்‌ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர் படத்திற்கு தேவையான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் முழு ஈடுபாடுடன் தாராளமாக செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பரீட்சார்த்தமாக செய்துப்பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்களில் எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்தும் படமாக ‘சிம்பா’ அமையும்ங்கிறதுல எந்த டவுட்டும் வேணாமுங்க…