சண்டக்கோழி -2 வுக்காக 6 கோடி செலவில் சென்னையில் உருவாகும் அழகான மதுரை!
விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் அவர்கள் நடிக்க இருக்கும் 25-வது படம் ”சண்டக்கோழி -2”.
இப்படத்துக்காக சென்னை பின்னிமில்லில் 10 எக்கர் நிலபரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்க அழகான மதுரையை பிரம்மாண்டமான செட் போட்டு 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளார்கள்.
அதற்கான பூஜை ஆகஸ்ட் 10-ம் தேதியான இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ், இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
விஷால் நடிக்க லிங்குசாமி இயக்கி ரிலீசான சண்டைக்கோழி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகமும் அதே ஆக்ஷன் பிளஸ் கமர்ஷியல் படமாக மிகப்பிரம்மாண்டமாக தயாராகிறது.