மித்ரன் மிக சிறந்த இயக்குநர் -ராஷி கண்ணா!

Get real time updates directly on you device, subscribe now.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகை ராஷி கண்ணா பேசும்போது,

Related Posts
1 of 10

இப்படத்தின் டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது. பல கதாபாத்திரங்கள் அமைத்து, பெண்ணியம் மற்றும் சமூக கருத்துகளையும் பொறுப்புணர்வோடு கதை அமைப்பது கடினம். அப்படியொரு ஒரு கடினமாக கதையை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் கையாண்டிருக்கிறார் மித்ரன். அவர் இயக்கும் அனைத்துப் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

சங்கி பாண்டே சார் அருமையாக நடித்திருக்கிறார். அவரை திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஜார்ஜ் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்த படத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.கார்த்தி மிகவும் பாதுகாப்பான நடிகர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரஜிஷா நன்றாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

#Sardar #சர்தார்