மீண்டும் இணையும் ‘நாடோடிகள்’ வெற்றிக் கூட்டணி!

Get real time updates directly on you device, subscribe now.

sasi

ட்புக்கு இலக்கணம் சொல்லும் படங்களில் என்றைக்கும் ‘நாடோடிகள்’ படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் படம்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த இந்தப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ‘போராளி’ படத்தை தானே தயாரித்து மீண்டும் சமுத்திரக்கனி படத்தில் நடித்தார் சசிக்குமார். அதன்பிறகு இருவருமே நடிப்பில் பிஸியாகி விட்டதால் அந்த வெற்றிக் கூட்டணி தரப்பிலிருந்து புதுப்படம் எதுவும் வரவில்லை.

Related Posts
1 of 12

இப்போது அதற்கான காலம் கனிய ஆரம்பித்திருக்கிறது போலும். மீண்டும் ஒரு புதுப்படத்தில் இந்தக் கூட்டணி இணைய இருக்கிறார்களாம்.

இதில் சசிக்குமார் ஹீரோவாக நடிக்க சமுத்திரக்கனி இயக்குகிறார். அனேகமாக படத்தை சசிக்குமாரே தயாரிப்பார் என்றும் தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெற்றிவேல் ரிலீசுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் சசிக்குமார்.