சசிகுமார் படத்தில் புதிய தோற்றம் காட்டும் சரத்குமார்
‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தைத் தொடர்ந்து கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சசிகுமார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை விஜய் ஆண்டனியை வைத்து ‘சலீம்’ வெற்றிப்படத்தைக் கொடுத்த நிர்மல்குமார் இயக்குகிறார்.
ஆக்ஷன் சாகச பொழுதுபோக்குப் படமான இந்த படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்கிறாராம் சரத்குமார்.
சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் அவரை பார்க்கும் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராம் மோகன்.
படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் மணி கலையை கவனிக்க, சக்தி சரவணன் நடனம் அமைக்கிறார்.
படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.