எஸ்.எஸ் ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்! – 300 கோடியில் தயாராகும் ‘ஆர்.ஆர்.ஆர்’

Get real time updates directly on you device, subscribe now.

லகமெங்கும் வசூலில் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”.

300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் இப்படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் சமுத்திரகனியும் நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.

இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1920-களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

Related Posts
1 of 142

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.

“ஆர் ஆர் ஆர்” என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும்.

ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைப்பாக சூட்டுவோம்” என்கின்றனர் படக்குழுவினர்.