மனோபாலா தயாரிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’ : அரவிந்த்சாமி ஜோடியானார் த்ரிஷா

Get real time updates directly on you device, subscribe now.

sathuranga-vettai

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் சித்தார்த் அபிமன்யு என்கிற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அரவிந்த்சாமி.

அப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் அது போன்ற முக்கியமான கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தவர் இப்போது மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் “சதுரங்க வேட்டை”.

நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் “சதுரங்க வேட்டை” படத்தில் கூறியிருந்தார்கள்.

Related Posts
1 of 20

முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது சதுரங்க வேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர வாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்க வைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் “சதுரங்கவேட்டை 2” படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது.

சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்க வேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் தான் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.