நட்பின் உயர்வைச் சொல்லும் ‘சவரிக்காடு’

Get real time updates directly on you device, subscribe now.

savarikkadu

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “சவரிக்காடு”.

இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் M.N.கிருஷ்ணகுமார்.

இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் இது. நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ள இப்படம் இம்மாதம் 21 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.