ஆங்கில மொழிக்கு நாங்கள் எதிரியல்ல… ஆனால்..? : பட விழாவில் சீறிய சீமான்

Get real time updates directly on you device, subscribe now.

seeman1

ழக்கமாக ஒரு நல்ல படத்தைப் பார்க்கும் எல்லோரும் ‘இது படமல்ல பாடம்’ என்று தான் கமெண்ட் அடிப்பார்கள்.

அந்த ‘பாடம்’ என்கிற வார்த்தையையே தனது இரண்டாவது படத்துக்கு டைட்டிலாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

சந்தானம், மிர்ச்சி சிவா, தன்ஷியா நடித்த ‘யா யா’ படத்தை இயக்கிய ராஜசேகருக்கு இது

ஜிபின் தயாரிப்பில் புதுமுகம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, மோனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் விஜித் நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார்.

டைட்டிலுக்கு ஏற்றாற்போலவே சமீபத்திய கல்வியின் தரம் பற்றியும், தமிழ் மொழிக் கல்வியில் ஆங்கில மொழிக் கல்வியை திணிப்பதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் கேள்வியெழுப்பும் முக்கிய படமாக இருக்கப்போகும் இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் இயக்குநர்கள் அமீர், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்களுடன் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர் ”இன்றைய சூழ்நிலையில் நாம் ஆங்கிலத்தை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது நல்லது. காரணம் இப்போது ஒரு உணவு விடுதிக்கு சென்றால் கூட அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. நான் ராம் படம் எடுத்த போது அதில் நடித்த நாயகி கஜாலாவிடம் பேச ஆசைப்பட்டேன். ஆனால் ஆங்கிலம் தெரியாததால் அவரோடு என்னால் மனம் விட்டு எதையும் பேசமுடியவில்லை. அதன்பிறகு தான் பருத்தி வீரன் படத்தில் தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்த ப்ரியாமணியை கதாநாயகி ஆக்கினேன்.

Related Posts
1 of 6

அதற்காக தமிழ்மொழியை மறந்து விடக்கூடாது. அது நம் மூச்சு மாதிரி எப்போதுமே நம்முடம் இருக்க வேண்டும். ஆங்கில மொழியை உலகின் எந்த இடத்துக்குச் சென்றாலும் பேசும் தேவைக்காக கற்றுக் கொள்வோம் என்றார்.

அடுத்து பேச வந்த சீமான். வழக்கம் போல தனது ஸ்டைலில் மத்திய, மாநில அரசுகளை பிரித்து மேயந்தவர் அமீருக்கு பதில் கொடுக்கும் விதமாகப் பேசினார்…

‘‘அறிவை வளர்க்கும் கல்வியையும், உயிரை காக்கும் மருத்துவத்தையும் அரசாங்கம் கொடுக்க வேண்டும், ஆனால் நமது நாட்டில் அப்படியா நடக்கிறது?

அறிவை கொடுக்கிற கல்வியையும், உயிரை காக்கிற மருத்துவத்தையும் நாம் தனியாரிடமிருந்து பணம் கொடுத்து பெறும் நிலையில் தான் இருக்கிறோம். பணம் இருப்பவர்களுக்கு நல்ல கல்வியும், மருத்துவமும் கிடைக்கின்றன.

பண வசதி இல்லாதவர்கள் நல்ல மருத்துவம் கிடைக்காமல் பாடையில் போக வேண்டிய சூழ்நிலைதான் இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியா நடக்கும்! இது மாற வேண்டும்.

தம்பி அமீர் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், எங்கு போனாலும் அதில் தான் பேச வேண்டியிருக்கிறது என்றார். நாம் அமெரிக்காவுக்குப் போனேன். அங்கு தமிழில் தான் பேசினேன். ஐ.நா மன்றத்துக்கு சென்றிருந்த போது அங்கு எல்லோரும் ப்ரெஞ்சு மொழியில் தான் பேசினார்கள். தப்பித்தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை. அதற்காக நாம் ஆங்கில மொழிக்கு எதிரி என்று அர்த்தம் இல்லை. ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள்! ஆனால் பயிற்று மொழி என்று வரும் போது அது நம் தமிழ் மொழியாக மட்டும் தான் இருக்க வேண்டும். நாட்டில் இருக்கிற அத்தனை மொழிக்கும் மூலம் தமிழ் மொழி தான். அப்படிப்பட்ட தமிழ் மொழியை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி ஆசையால் அழித்து விடாதீர்கள்.” என்றார்.