வரவேற்பைப் பெற்று வரும் சூர்ப்பனகை

Get real time updates directly on you device, subscribe now.


தான் நடிக்கும் படங்கள் தனித்து வாழும் ரிய வேண்டும் என்பதில் அக்கறையோடு இருக்கிறார் ரெஜினா கஸண்ட்ரா. மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த “எவரு” பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன.

தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. “திருடன் போலிஸ்” படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், மர்ம வகை திரில்லர் படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.