‘கபாலி’ கோ டூ அமெரிக்கா : அங்கேயாவது நிம்மதியா படமெடுக்க விடுங்கப்பா…

Get real time updates directly on you device, subscribe now.

kabali2

ரஜினி நடித்த படங்களிலேயே உச்சகட்டப் பாதுகாப்பையும் மீறி படத்தின் சீக்ரெட் உடனுக்குடன் வெளிவந்த படம் என்றால் அது மலேசியாவில் நடக்கும் கபாலி படத்தின் சீக்ரெட்டுகள் தான்.

தினமும் ஒரு ரசிகராவது படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோக்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கபாலி டீமுக்கு ப்ரஸரை ஏற்றி விடுவார்கள்.

இதனால் ஷாக்காகிப் போன இயக்குநர் ரஞ்சித் ரஜினியிடமே நேரடியாக முறையிட, இப்போது படப்பிடிப்புக்கு எந்த ரசிகரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கண்டிஷன் போட்டதால் பெருமழைக்கு மத்தியிலும் படப்பிடிப்பு நிம்மதியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

Related Posts
1 of 2,323

ரசிகர்களை படப்பிடிப்பில் சந்திக்க முடியாமைக்கு பெருந்தன்மையோடு மன்னிப்பும் கேட்டு விட்டார்.

தற்போது இன்னும் இரண்டு தினங்களில் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் பேக்கப் ஆகிறது. அதன் பிறகு சென்னை வரும் ரஜினிகாந்த் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா செல்லப் போகிறார்.

அங்கேயாவது நிம்மதியா படமெடுக்க விடுங்கப்பா…