ஆபாசம், அருவறுப்பு, கேவலத்தின் உச்சம்! : தீயாய் பரவுது சிம்புவின் பீப் சாங்

Get real time updates directly on you device, subscribe now.

Simbu1

இதுபோன்ற கேவலங்களை எல்லாம் தெரிந்து தான் செய்கிறாரா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது சிம்பு குரலில் வந்திருக்கும் அந்த அறுவறுப்பான பாடலைக் கேட்கும் போது!

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக ‘பீப் சாங்’ ஒன்று ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.

ஆரம்ப வரிகள் மிக மிக அறுவறுக்கத்தக்க கொச்சையான வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டிருக்கும் அந்தப் பாடலை எழுதியவரும் சிம்பு தானாம்.

‘சரோஜாதேவி’ புத்தகங்களில் வரும் வார்த்தைகளைப் போல இருக்கும் அந்த வார்த்தைகளை அவர் பாடலில் பயன்படுத்தியிருப்பது கேவலத்தின் உச்சம்.

Related Posts
1 of 34

இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும் இளைஞர்கள் யாராவது தெருவில் நடந்து போகும் பெண்களைப் பார்த்து பாட ஆரம்பித்தாலோ? அல்லது அவர்கள்  சென்று செல்போனில் ஓட விட்டாலோ? சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது மட்டும் நிஜம். மேலும் இந்தப்பாடலுக்கு அனிருத் தான் இசையமைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அச்சு அசப்பில் சிம்பு குரலில் இருக்கும் இந்தப்பாடலை உண்மையிலேயே சிம்பு – அனிருத் கூட்டணி தான் வெளியிட்டார்களா? என்றும், மறுபக்கம் இது சிம்புவின் குரலில் வேறு யாராவது ரசிகர்கள் செய்த வேலையா? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

பாடி வெளியிட்டது யாராக இருந்தாலும் இனிமேலும் இப்படிப்பட்ட கேவலமான பாடல்கள் வெளியாக இடம் கொடுக்கவே கூடாது என்பதே நலம்.

பின்குறிப்பு : ஆபாசமான அந்தப்பாடலை மேற்கொண்டு பரவ விடக்கூடாது என்பதற்காக இங்கே இணைக்கப்படவில்லை