நயன்தாராவுடன் திருமணமா? : நக்கலாக பதில் சொன்ன சிம்பு!

காதலித்து பிரிந்த பிறகு மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்தார் நயன் தாரா.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் அவர்கள் இருவரும் காதலித்த போது நடந்த சுவாரஷ்யமான சம்பவங்களை காட்சிகளாகவும், வசனங்களாகவும் படமாக்கியிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.
கலவையான விமர்சனங்களுடன் கல்லா கட்டி வரும் இந்தப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து வாழ்வதற்காக நயன் தாரா ஏங்குவது போன்ற காட்சி உண்டு, கிளைமாக்ஸில் சிம்புவை நயன் தாரா திருமணம் செய்து கொள்வது போலவும் முடித்திருப்பார்கள்.
இந்நிலையில் படத்தில் இணைந்தது போல நிஜ வாழ்க்கையிலும் நயன் தாராவுடன் நீங்கள் இணைவீர்களா? என்று சிம்புவிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிம்பு, ”சினிமாவை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடாதீர்கள். நயன் தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணையும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை” என்று நக்கலாக பதிலடி கொடுத்தாராம் சிம்பு.
கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல…