சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

sivakarthikeyan

‘யாகாவாராயினும் நா காக்க’ படத்துக்குப் பிறகு கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஹீரோவாகியிருக்கிறார் ஆதி.

அந்தப் படத்தில் அவருடன் ஜோடி போட்ட நிக்கி கல்ராணி தான் இதிலும் நாயகி. ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷன் இன்று காலை மார்ச் 15-ம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Posts
1 of 2,275

இன்னொரு ஸ்பெஷலாக உறியடி இயக்குநர் விஜயக்குமார், ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன், துருவங்கள் 16 இயக்குநர் கார்த்திக் நரேன், ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் சைத்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திஆகியோருக்கு ‘மரகத புதையல்’ ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபுவுடன் இயக்குநர் ஏ ஆர் கே சரவண், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், கலை இயக்குநர் என் கே ராகுல், பாடலாசிரியர்கள் முத்தமிழ், அருண்ராஜா காமராஜ், ஜி கே பி உள்ளிட்ட மரகத நாணயம் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான். அந்த வகையில் தனது கல்லூரி கால ஞாபகங்களை இந்த விழா கிளறி விட்டு விட்டது. இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்று நெகிழ்ந்தார். சிவகார்த்திகேயன்.