‘கபாலி’ பார்த்தார் சோ ராமசாமி : ரஜினியிடம் என்ன சொன்னார் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

cho
‘க
பாலி’ படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல வசூலைத் தான் பெற்றுள்ளது.

இந்த வெற்றிச் செய்தி அமெரிக்காவில் இருந்த ரஜினியின் காதுகளை எட்டவும் இரண்டு மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவுடன் ரஜினி செய்த முதல் வேலை ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம் எழுதியது தான்.

வரலாறு காணாத வசூலோடு படம் ஹிட்டாகியிருப்பதால் அந்த வெற்றிக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் அந்த கடிதத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.

Related Posts
1 of 74

அப்படி பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்ட கபாலியை நேற்று மாலை தனது நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான சோவுக்கு படத்தை பிரத்யேகமாக போட்டுக் காண்பித்து அவரோடு ரஜினியும் சேர்ந்து பார்த்தார்.

படத்தைப் பார்த்த சோ ராமசாமி, ரஜினியை வேறொரு கோணத்தில் பார்த்ததில் ‘மகிழ்ச்சி’ என்றாராம். அதோடு படம் நல்லாயிருப்பதாகவும், அங்கிருந்த படக்குழுவினரை பாராட்டினார்.