ஹீரோ ஆகிறாரா சூரி? – சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரகசியம்
சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணி இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாகத் தான் இருக்கும்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக இந்தக் கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.
சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது.
ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் ட்ரெய்லரின் கடைசி மூன்று ஷாட்டுகளைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் ‘பாகுபலி’ மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை.
இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்.
படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ‘ரஜினி முருகன்’ படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது.
சூரி அண்ணன் ஹீரோக்களைப் போல சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வைத்திருக்கிறார். விரைவில் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும். இவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இங்கே யாரும் என்ன வேண்டுமாலும் செய்யலாம், உங்களுக்கும் ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதனால் ஹீரோவாக நடியுங்கள். படம் மட்டும் காமெடியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
என் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன்.