‘சீரியஸ்’ ஆகும் சிவகார்த்திகேயன் விவகாரம் : களத்தில் இறங்குகிறார் விஷால்!
‘ரெமோ’ படத்தின் மாபெரும் வெற்றியை அனுஅனுவாக கொண்டாடி மகிழ வேண்டியவர் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்.
ஆனால் படத்தின் வெற்றி விழாவிலோ சிவகார்த்திகேயன் மேடை என்றும் பாராமல் தனது உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த குமுறல்களை கொட்டித் தீர்த்ததுடன் கண்ணீர் விட்டு அழுதார்.
வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவருடைய அந்த திடீர் அழுகை கேள்வியை எழுப்ப இன்னும் எவ்வளவு தான் எங்களுக்கு பிரச்சனை கொடுப்பீங்க… எங்களை நிம்மதியா வேலை செய்ய விடுங்க… என்று கண் கலங்க பதில் தந்தார்.
இதனால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் பதற்றமடையை சிவகார்த்திகேயனின் அந்த மேடை கண்ணீர் பற்றித்தான் கோடம்பாக்கத்தின் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சாக இருந்து வருகிறது.
அவரின் இந்த கண்ணீர் விவகாரம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே இன்று வரை விவாதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு முதல் ஆளாக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த விவாகாரம் குறித்து நடிகர் சங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில் இந்த விவகாரத்தில் தீர்வு காண களமிறங்கப் போகிறாராம் நடிகர் சங்க செயலாளர் விஷால்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது “சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆக சிவகார்த்திகேயன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.