ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’பார்க்கிங்’ !

Get real time updates directly on you device, subscribe now.

தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் கஹாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய ‘பார்க்கிங்’ படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.

Related Posts
1 of 5

படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.