இன்னும் இரண்டு பேரக்குழந்தைகள் : ஆசைப்பட்டார் ரஜினி; நடக்கலையே..?

”டைவர்ஸ்”
சமீபகாலமாக திரையுலகில் அதிகம் ட்ரெண்ட்டிங் ஆகி வருவது இந்த வார்த்தை தான்.
சில மாதங்களுக்கு முன்பு தான் உருக உருக காதலித்து சொந்த பந்தங்கள், நண்பர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் விவாகரத்து வேண்டி நீதிமன்றப் படியேறினார்கள்.
அந்த ஆச்சரியமே இன்னும் விட்டு விழகாத நிலையில் ரஜினியின் இளைய மகள் செந்தர்யாவும் அந்த டைவர்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்திருப்பது தான் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
வாய் திறந்து பேச வேண்டிய கபாலியில் ஆரம்பித்து வாய் திறக்கவே கூடாத காவேரி வரை ரஜினியைச் சுற்றிலும் பிரச்சனைகள் நிரம்பிக் கொண்டிருக்க அதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் ஆசை.
ஆனால் இப்போது சொந்த மகளின் வாழ்க்கையே அவரின் நிம்மதிக்கு பங்கம் வரும் விதமாக மாறியிருப்பது தான் ரஜினிக்கு கவலைக்கு மேலும் கவலையடையச் செய்திருக்கிறது.
ஈகோ. கட்டற்ற சுதந்திரம் போன்ற சில விஷயங்களால் ஏற்படும் இந்த விவாகரத்து செளந்தர்யாவின் வாழ்க்கையிலும் விளையாடியது தான் கொடுமையிலும் கொடுமை.
முந்தாநாள் வரை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா விவாகரத்து செய்யப் போகிறார் என்று அரசல் புரசலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது.
அது உண்மையா? பொய்யா? என்கிற குழப்பத்துக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்தார் செளந்தர்யா. ஆமாம் எனது திருமணம் குறித்து வெளியாகி வரும் செய்தி உண்மைதான். நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பிரிந்துதான் வாழ்கிறோம். மேலும் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தை மேலும் பெரிதுபடுத்தாமல் எங்கள் குடும்பத்தின் பிரைவசியை காப்பாற்ற உதவுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். என்று கேட்டுக் கொண்டார்.
செளந்தர்யாவின் நிலைமை இப்படியிருக்க ஒரு அப்பாவாக தன் இரண்டு மகள்களும் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அன்றே கோச்சடையான் மேடையில் பேசினார் ரஜினி.
செளந்தர்யாவும், ஐஸ்வர்யாவும் கல்யாணம் பண்ணிட்டாங்க. கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்போ அவங்க வந்து டைரக்ட் பண்றாங்கன்னு சொன்னா கண்டிப்பா அவங்க கணவர்களோட உதவி போய்ச்சேரும். அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்றேன்.
ஒரு குடும்பத்துல ஆண்களை விட பெண்கள் தங்களோட குழந்தைகள் கூட அதிக நேரம் செலவிடணும். அதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து, ஏன்னா அப்பத்தான் நாம இந்த சமுதாயத்துல ஒரு நல்ல குடிமகனை உருவாக்க முடியும். அந்த குழந்தைகள் 12 வயசு வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம்கிறது என்னோட கருத்து. நீங்க சம்பாதிச்சுத் தான் எனக்கு கொடுக்கணும்கிற அவசியமில்லை. சேர்த்து வெச்சிருக்கிறதை விட்டுடாம பொறுப்பா பார்த்துக்கிட்டாலே போதும் என்று நெகிழ்ந்து பேசினார்.
மொத்தத்தில் அந்த விழாவில் பேசிய ரஜினிக்கு தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் குடும்ப வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கையாக இருந்தது.
ஆனால் அதற்கு செளந்தர்யா செய்திருக்கும் கைமாறு
டைவர்ஸ்!