தனி விமானம்; ஆடம்பர ரிசார்ட்..! : நாக சைதன்யா – சமந்தா திருமண ஏற்பாடுகள்… தடபுடல்!
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – சமந்தா திருமணம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை நாக சைதன்யாவின் அப்பாவும், நடிகருமான நாகர்ஜூன் செய்து வருகிறார். முன்னதாக தெலுங்கு திரையுலகின் எல்லா நட்சத்திரங்களையும், தனது நெருங்கிய சொந்தங்களையும் திருமணத்துக்கு அழைத்து விட்டார். அதோடு ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களிலிருந்தும் மற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் விருந்தினர்களாக வர உள்ளனர்.
அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக கோவா பெகுபட் விமான நிலையத்திலிருந்து கோவாவுக்கு வி.வி.ஐபி விருந்தினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் ஒன்றை பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும், கோவாவில் ஒரு ஆடம்பர ரிசார்ட் ஒன்றும் வி.வி.ஐ.பி தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
150 முதல் 200 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளப்போகும் இந்த எளிமையான திருமணத்துக்கே சுமார் 10 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறாராம் நாகர்ஜூன்.
அக்டோபர் 6 ம் தேதி இந்து சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளும் நாக சைதன்யாவும், சமந்தாவும் , மறுநாள் கிறிஸ்தவ மரபுப்படி திருமணம் செய்து கொள்வார்கள்.
கோவாவில் நடைபெறும் திருமணத்திற்கு அழைக்கப்படாதவர்களுக்கு ஹைதராபாத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்படவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.