சிருஷ்டி டாங்கேவுக்கு மவுசு கூடிப்போச்சு… : அது மட்டுமா..?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் நம்பித்தாங்க ஆகணும். இன்றைய தேதியில் இரண்டாவது வரிசை ஹீரோயின்கள் லிஸ்ட்டில் அதிக படங்களுடன் முன்னணியில் இருப்பவர் சிருஷ்டி டாங்கே தான்.
இந்த வருடம் மட்டும் அவருக்கு நான்கு படங்கள் ரிலீசாகியிருக்கிறது, அதுபோக கைவசம் வில் அம்பு, கத்துக்குட்டி, அச்சமின்றி, நவரச திலகம், கலைக்கூத்து என ஐந்து படங்களை வைத்திருக்கிறார்.
எப்படி வந்தது இந்த திடீர் மவுசு?
வேறொன்றுமில்லை.
தன்னைத் தேடி வருகிற இயக்குநர்களிடம் கதை மட்டுமல்ல, சம்பளத்தில் கூட கறார் காட்டுவதில்லையாம்.
கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு சமத்துப் பிள்ளையாக படப்பிடிப்பில் நடந்து கொள்வதால் முதல் வரிசை நடிகைகளின் கால்ஷீட் கிடைக்காதவர்களின் அடுத்த சாய்ஸ் சிருஷ்டி டாங்கே தான்.
இதனால் அவரைத் தேடி வருகிற இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. தனக்கு ஏற்பட்ட இந்த திடீர் மவுசைப் பார்த்து மிரண்டு போன சிருஷ்டி தனது சம்பளத்தை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தியிருக்கிறாராம்.
எல்லாம் கால்ஷீட் சொதப்பலாகி இருக்கின்ற வாய்ப்புகளும் போய் விடக்கூடாதே என்கிற முன் ஜாக்கிரதை தான் காரணம் என்கிறார்கள்.
புத்திசாலிப்புள்ள…