’19 கோடி’ விவகாரத்து விவகாரம்! : உண்மையைச் சொன்னார் சுதீப்
கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு இந்த வாரம் தனது மனவி பிரியா ராதாகிருஷ்ணனை விவாகரத்து செய்து விட்டார் நடிகர் சுதீப்.
விவாகரத்துக்கு ஈடாக ரூ. 19 கோடி ஜீவனாம்சம் கொடுக்கவும் தனது மகள் சான்வி பிரியாவின் பாதுகாப்பில் வளரவும் சுதீப் சம்மதித்துள்ளார்.
‘விவாகரத்தால் எனக்கும் என் மகளுக்கும் உள்ள பிணைப்பில் எந்த மாற்றமும் இல்லை. என்றவர் இன்னொரு விஷயத்தையும் மனம் திறந்து கூறியிருப்பது தான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
என் சினிமா வாழ்க்கை பரபரப்பான வாழ்க்கையாகி விட்டது. அந்த பரபரப்பில் என் மனைவிக்கும், குழந்தைக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கித் தர முடியவில்லை. சான்வி என் ஒரே மகள். அவள் தான் எனக்கு முக்கியம். அவளுக்காக நான் எப்போதும் இருப்பேன்.’ என்று கூறியிருக்கிறார் சுதீப்.