விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த ஸ்ருதிஹாசன்!
‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படங்களைத் தயாரித்த விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களை தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ”லாபம்”.
தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் ”லாபம்” படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதிரடி ஆக்ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படத்தை ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படம் படப்பிடிப்பு துவங்கிய முதல்நாளே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.