முத்தையா… கொஞ்சம் நில்லையா… : சூர்யா போட்ட காமெடி ப்ளான்
அடுத்த படம் என்னவென்று கேட்டால் பெரும்பாலான ஹீரோக்கள் மிகச்சரியான தகவலை மீடியாக்களுக்கு சொல்வார்கள்.
ஆனால் சூர்யாவைப் பொருத்தவரை இந்த நிமிடம் அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் சில நேரங்களில் அவருடையை அடுத்த மூவ்மெண்ட்டாக இருக்கிறது.
ஹரி இயக்கத்தில் ‘எஸ் 3’ படத்தில் நடித்து வந்த சூர்யா அடுத்த படமாக கொம்பையா இயக்குநர் முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுத்திந்தார். கூடவே இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் ஒரு புதுப்படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.
அப்படியானால் ‘எஸ் 3’ முடிந்த பிறகு முத்தையா படம், அதன்பிறகு ரஞ்சித் படம் என்று தான் அவரது அடுத்தடுத்த படப்பட்டியல் இருந்தது.
இப்போது அந்த வரிசை அப்படியெ மாற்றம் பெற்று விட்டது. இடையில் விக்னேஷ் சிவன் சொன்ன ஒரு கதை பிடித்துப் போக கபாலி சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்தை கழட்டி விட்டு விட்டு விக்னேஷ் சிவனை தனது 35 வது படத்துக்கு இயக்குநராக்கி விட்டார்.
சரி அப்படியானால் முத்தையா படம் என்னவானது? என்கிற கேள்விக்கு அந்தப்படம் ட்ராப்பாகி விட்டது என்று செய்தி கிளம்பியது.
ஆனால் நிஜம் அப்படியில்லையாம். விக்னேஷ் சிவன் படத்தை முடிக்கும் வரை முத்தையாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார் சூர்யா.
அது ஒரு மாஸ் ஹீரோவுக்கான படம் என்பதால் இடையில் ஒரு காமெடிப்படம் பண்ண வேண்டும் என்பது தான் சூர்யாவின் ஆசை அதனால் தான் முத்தையாவுக்கு முன்பாக விக்னேஷ்சிவனை கமிட் செய்து விட்டார் சூர்யா.
வழக்கமான தனது படங்களில் லட்சுமிமேனனை கமிட் செய்யும் இயக்குநர் முத்தையா இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை கமிட் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.