விஜய் சேதுபதிக்கு எதிராக திரண்ட ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள்!
மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகியிருக்கும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல தென்னிந்திய மொழிகளிலும் டப் ஆகி வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ’அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள்.
இந்தப் படத்தில் வரும் அயர்ன் மேன் கேரக்டருக்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அதேபோல் பிளாக் விடோ என்ற கேரக்டருக்கு நடிகை ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.
இதில் ஆண்ட்ரியா குரலைக் கூட மன்னித்து விட்ட ரசிகர்கள், விஜய் சேதுபதியின் குரலைக் கேட்டுத்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நல்ல நடிகர் தான். ஆனால் அவருடைய குரல் அயர்ன் மேன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட்டாகவில்லை. தயவு செய்து அவருடைய குரலை மாற்றி விட்டு ஏற்கனவே முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களுக்கு குரல் கொடுத்தவரையே குரல் கொடுக்கச் சொல்லி என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ரசிகர்களுக்கு இந்த கோரிக்கைக்கு தயாரிப்பு நிறுவனம் செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.