சாய்குமாரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘காட்டேரி’ : ஜோடி பிக்பாஸ் புகழ் ஓவியாவாம்…

Get real time updates directly on you device, subscribe now.

oviya2

தொடர்ந்து தரமான படங்களை தனது நிறுவனத்தின் கீழ் தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா புதிதாக தயாரிக்கும் படம் தான் ‘காட்டேரி.’

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களை இயக்கிய டீ.கே இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

Related Posts
1 of 11

இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் மிக எளிமையாக நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.