டக்கர்- விமர்சனம்

“சூப்பரான டைட்டில் பட் சுமாரான கான்செப்ட்” என துவக்கத்திலே அப்செட் செய்யும் படமாக வந்துள்ளது டக்கர்
சித்தார்த் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞர். பணம் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை அவருடையது. திவ்யன்ஷா கெளசிக் ஒரு பணக்கார வீட்டுப்பெண். அவருக்கு பணக்காரராய் இருப்பதால் சில சங்கடங்கள் இருக்கிறது. இந்த இருவரும் காதலால் கசிந்துருகி ஒன்றிணையும் போது என்னென்ன சிக்கல்கள் எல்லாம் வருகின்றன என்பதே கதை. பணக்காரப் பெண் ஏழை பையன் இவர்களுக்குள் காதல் என்பது தான் அடிநாதம்..ரொம்பப் பழைய அடிநாதம் இது
சித்தார்த் ஆக்ஷன் காட்சிகளில் உழைப்பைக் கொட்டியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அவரது நடிப்பு பெரிதாக சோபிக்கவில்லை. திவ்யன்ஷா கெளசிக் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். வசீகரமான முக பாவனைகளும் அவருக்குப்பலம். யோகிபாபு, ஆர்.ஜே விக்னேஷ், முனிஷ்காந்த் ஆகியோர் சிரிக்க வைக்க அநியாயத்திற்கு முயற்சித்துள்ளார்கள். வில்லன் டீம் டோட்டல் டேமேஜ் செய்யப்பட்டுள்ளது
நிவாஸ் கே பிரசன்னா இசையில் இரு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் தனது வேலையைச் சரியாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவில் வாவ் எனச் சொல்லும்படி ஒரு ஷாட்டும் இல்லை. நிறைய இடங்களில் காம்ப்ரமைஸ் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்
ஒரு பழையக் கதையைக் கூட புதுசாக சொல்ல முடியும். இயக்குநர் கதையைப் போலவே திரைக்கதையிலும் பழைய பார்மட்டை கையில் எடுத்துள்ளார். புதுமை மற்றும் சுவாரஸ்யம் எதுவுமே திரைக்கதையில் இல்லை என்பதால் இந்த டக்கர் வண்டி மக்கராகி கிடக்கிறது
2/5
#டக்கர் #Takkar